தொகுதி பதவியை இழக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
லண்டன்: 'ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 2024ல் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலில், பெரும்பான்மை கிடைக்காமல், பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் இழக்க நேரிடும். தன் தொகுதியிலேயே, அவர் தோல்வி அடைவார்' என, கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தல், 2024ல் நடக்க உள்ளது. 'பிரெக்சிட்' எனப்படும், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிஉள்ளது.

லண்டன்: 'ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 2024ல் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலில், பெரும்பான்மை கிடைக்காமல், பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் இழக்க நேரிடும். தன் தொகுதியிலேயே, அவர் தோல்வி அடைவார்' என, கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.



latest tamil news


பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தல், 2024ல் நடக்க உள்ளது. 'பிரெக்சிட்' எனப்படும், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிஉள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அங்கு நடத்தப்பட்ட முதல் கருத்துக் கணிப்பில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து, தனியார் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாவது:பிரெக்சிட் விவகாரத்தை, பிரதமர் போரிஸ் ஜான்சன் கையாண்ட விதம், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. கொரோனா வைரஸ்கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதிலும், அரசு தோல்வி அடைந்துள்ளதாக, மக்கள் கருதுகிறனர். தற்போது, மரபணு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி யுள்ளது, மக்களின் அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உறவினர்கள், நண்பர்களை சந்திக்க அனுமதி அளித்துவிட்டு, அதை உடனேயே திரும்பப் பெற்றது, மக்களிடையே, ஜான்சனின் செல்வாக்கு குறைய காரணமாகிவிட்டது.வரும், 2024 தேர்தலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி, 284 இடங்களில் வெற்றி பெறலாம். எதிர்க்கட்சியான, லேபர் கட்சி, 282 இடங்களில் வெல்லலாம். இதன் வாயிலாக, 81 தொகுதிகளை கன்சர்வேடிவ் கட்சி இழக்க நேரிடும்.


latest tamil news


மேலும், லண்டனுக்கு மேற்கே உள்ள உக்ஸ்பிரிட்ஜ் தொகுதியில், ஜான்சனுக்கு தோல்வியே கிடைக்கும்.மாறுவதற்கு வாய்ப்புபிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்தை பிரிக்க வேண்டும் என போராடிவரும், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி, ஸ்காட்லாந்தில் உள்ள, 59 தொகுதிகளில், 57ல் வெற்றி பெறும். அதனால், அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக, அந்தக் கட்சி இருக்கும்.வரும் மாதங்களில், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்து, ஜான்சன் மற்றும் அவரது கட்சியின் வெற்றி வாய்ப்பு மாறுவதற்கு வாய்ப்புஉள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
04-ஜன-202117:55:23 IST Report Abuse
Malick Raja இன்றிருப்போர் நாளை இல்லை .. நிலையற்ற வாழ்வில் ..கூடுதல் முன்கருதல் மதிப்பீடு என்பது அவ்வளவாக சரியாக இருக்க வாய்ப்பில்லை
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
04-ஜன-202114:35:41 IST Report Abuse
Dr. Suriya 2024.... அதுக்கு இப்போ என்ன அவசரம்....
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
04-ஜன-202106:41:07 IST Report Abuse
Mannai Radha Krishnan கூடிய சீக்கிரம் மொத்த ஈரோப்பாவும் முஸ்லிம் நாடாக மாறும் என்ற ஜோஸ்யத்த பலிக்க வைப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X