பொது செய்தி

தமிழ்நாடு

ஊர் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை? கணுவக்கரை மக்கள் ஆர்வம்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
அன்னுார்:வளர்ச்சித் திட்டம் தயாரிக்கும் கூட்டத்தில் கணுவக்கரை மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.அனைத்து ஊராட்சிகளிலும், திட்டமிடல் குழு அமைத்து, மக்கள் பங்கேற்புடன், அடுத்த நிதியாண்டில் ஊராட்சியின் தேவை குறித்து வளர்ச்சித் திட்டம் தயாரிக்க, மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி, அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், வயது குறைந்த வார்டு

அன்னுார்:வளர்ச்சித் திட்டம் தயாரிக்கும் கூட்டத்தில் கணுவக்கரை மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.அனைத்து ஊராட்சிகளிலும், திட்டமிடல் குழு அமைத்து, மக்கள் பங்கேற்புடன், அடுத்த நிதியாண்டில் ஊராட்சியின் தேவை குறித்து வளர்ச்சித் திட்டம் தயாரிக்க, மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி, அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், வயது குறைந்த வார்டு உறுப்பினர், வறுமை ஒழிப்பு சங்க செயலர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயலர், சமூக ஆர்வலர் ஆகியோர் அடங்கிய ஒன்பது பேர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு உறுப்பினர்கள், வேளாண்மை, கால்நடை, கல்வி உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, அடுத்த நிதியாண்டில் ஊராட்சிக்கான தேவை குறித்து வளர்ச்சித் திட்டம் தயாரிக்க வேண்டும். இதற்கான மக்கள் பங்கேற்கும் கூட்டம், கணுவக்கரை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் காந்திமதி தலைமை வகித்தார்.கருணாநிதி நகரில், கான்கிரீட் ரோடு மற்றும் வடிகால் அமைக்க வேண்டும். ஆல பாளையம், அண்ணா நகர், பாரதி நகரில் கான்கிரீட் ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். வடிகால், தெருவிளக்கு, குடிநீர், சமுதாயநலக்கூடம், மேய்ச்சல் மைதானம் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. திட்டமிடல் குழுவினர், கோரிக்கைகளை பதிவு செய்தனர். துணைத்தலைவர் சிவான், வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'வளர்ச்சித் திட்ட அறிக்கை ஒன்றிய நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X