பொது செய்தி

தமிழ்நாடு

முன் மாதிரியாக உருவாகும் 'காலிங்கராயன்!' தன்னார்வலர்களின் தளராத பணிக்கு சபாஷ்!

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:காலிங்கராயன் குளத்தில், தன்னார்வலர்கள் மேற்கொண்டு வரும் களப்பணி, நேற்று50ம் வாரத்தை எட்டியது. குளம், நீர் வழிப்பாதை சீரமைப்பு, மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகளுடன், நேற்று கவிதை தொகுப்பும் வெளியிடப்பட்டது.கோவில்பாளையம் அடுத்த கொண்டயம்பாளையம் ஊராட்சியில், 120 ஏக்கரில் காலிங்கராயன் குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் நிரம்பினால், சுற்று வட்டாரத்தில் பல நுாறு

கோவில்பாளையம்:காலிங்கராயன் குளத்தில், தன்னார்வலர்கள் மேற்கொண்டு வரும் களப்பணி, நேற்று50ம் வாரத்தை எட்டியது. குளம், நீர் வழிப்பாதை சீரமைப்பு, மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகளுடன், நேற்று கவிதை தொகுப்பும் வெளியிடப்பட்டது.கோவில்பாளையம் அடுத்த கொண்டயம்பாளையம் ஊராட்சியில், 120 ஏக்கரில் காலிங்கராயன் குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் நிரம்பினால், சுற்று வட்டாரத்தில் பல நுாறு ஏக்கரில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்ததால், குளத்துக்கு தண்ணீர் வரும் பாதையும் தடைபட்டிருந்தது.இந்த குளத்தை பராமரிக்கவும், நீர் வழிப்பாதையை சீரமைக்கவும், தன்னார்வலர்கள் திட்டமிட்டனர். அதன்படி கோவில்பாளையம் நீர் நிலை பாதுகாப்பு அமைப்பு உட்பட, 12 அமைப்புகள் இணைந்து, கடந்த ஆண்டு களப்பணியை துவக்கினர்.ஒவ்வொரு வாரமும், ஞாயிறன்று, தன்னார்வலர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாரநாட்களில், இயந்திரங்கள், வாகனங்கள் மூலம் பணி நடக்கிறது.50வது வாரமான நேற்று திரளான தன்னார்வலர்கள் பங்கேற்று களப் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி, கவிஞர் ராஜாராம் எழுதிய 'மனற்கேணி' என்னும் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.களப்பணி நிறைவில் தன்னார்வலர்கள் கூறியதாவது:கடந்த, 50 வாரங்களில், காலிங்கராயன் குளத்தின் பல கி.மீ., துார குளக்கரைகள் அகலப்படுத்தப்பட்டு உள்ளன. 20 டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் குப்பை, மதுபாட்டில்கள், குளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. மண் மேடுகள், புதர்கள் அகற்றப்பட்டு மழைநீர் வரும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. மிக அரிய வகை நாட்டு மரக்கன்றுகள் 2,000 எண்ணிக்கையில் நடப்பட்டுள்ளன.ஒவ்வொரு வாரமும் அவற்றுக்கு நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல் பணிகளை தன்னார்வலர்கள் செய்கின்றனர். குளத்தில் மூன்று குறுங்காடுகள் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. 153 அடி அகல மடை சீரமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பணி நடந்து வருகிறது.குளத்தின் நடுவே பறவைகள் தங்குமிடம், நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளால் தற்போது குளத்தில் நீர் சேர்ந்துள்ளது. அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தில் குளத்தில் நீர் நிரப்ப குழாய் பதிக்கும் பணியும் நடக்கிறது.இக்குளத்தை மாவட்டத்தின் முன்மாதிரி குளமாக உருவாக்க, தன்னார்வலர்கள், நீர்நிலை அமைப்புக்கள் ஒத்துழைப்போடு பணிகள் நடக்கின்றன. பணியில் உதவ விரும்புவோர், 9944921271 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.நேற்று தன்னார்வலர்கள் பலர் களப்பணிக்கு நன்கொடை அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X