அன்னுார்:அரசு மருத்துவமனையில், காலி பணியிடங்கள் மற்றும் படுக்கைகள் குறைவால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.அன்னுார் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் ஒன்றரை லட்சம் பேருக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனையில், ஏழு டாக்டர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். 52 படுக்கைகளே உள்ளன. இவை போதுமானதாக இல்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து அன்னுார் மக்கள் கூறியதாவது:தினமும், 600 முதல் 700 புறநோயாளிகள் அன்னுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். வெளிப்பணி உள்ளிட்ட காரணங்களால் மூன்று டாக்டர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மருத்துவ ஆலோசனை பெறுவதும், பிறகு மீண்டும் வரிசையில் காத்திருந்து, ஊசி போடுவதும் தொடர்கிறது.மருத்துவ உதவியாளர், ஆம்புலன்ஸ் டிரைவர், டாக்டர்கள், செவிலியர்கள் என ஏராளமான பணியிடங்கள் பல ஆண்டுகளாக அன்னுாரில் காலியாகவே உள்ளன. ஜெனரேட்டர் இல்லை. பெரிய அறுவை சிகிச்சைக்கு வசதி இல்லை.'இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்' என தொகுதி எம்.எல்.ஏ.,வும் சபாநாயகருமான தனபாலிடம், ஐந்து ஆண்டாக பலமுறை மனு கொடுத்துள்ளோம். கலெக்டர், நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவிடமும் மனு கொடுத்துள்ளோம். ஆனாலும் பலனில்லை. கோவைக்குச் செல்லும் வழியிலேயே ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் இறந்து விடுகின்றனர்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர். இம்மருத்துவமனையை 100 படுக்கை கொண்டதாகவும், அதிக எண்ணிக்கையில் டாக்டர்கள் பணியில் இருக்கும் வகையிலும், மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE