அன்னுார்:ஜீவா நகர், வடக்கு குடியிருப்போர் சங்க துவக்க விழா நடந்தது.அன்னுார், மேட்டுப்பாளையம் ரோட்டில், ஒட்டர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த, ஜீவா நகர் வடக்கு குடியிருப்போர் நலச் சங்க பெயர் பலகை திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், சங்கத்தின் அவசியம் குறித்தும், அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் பெறுவது குறித்தும் பேசினார்.விழாவில், சங்க தலைவராக தங்கவேல், செயலாளராக சுப்ரமணியம், பொருளாளராக ஆர்த்தி, துணைத் தலைவராக முருகசாமி, துணை செயலாளராக சக்திவேல், ஆலோசகராக சண்முகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இப்பகுதியில், கழிவு நீர் வடிகால், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE