ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல் நிலை தேர்வில் 45.84 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
ராமநாதபுரம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி,செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 16 மையங்களில் நடந்தது. 4464 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.காலை 9:15 மணிக்குள் மையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் பின் வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை.நேற்று2418 பேர் மட்டும் எழுதினர்.இது 54.16 சதவீதம். 2046 பேர் ஆப்சென்ட் ஆகினர்.இது 45.84 சதவீதம் ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லுாரி, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தேர்வு மையங்களில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.