தேவிபட்டினம் : தேவிபட்டினத்தில் இருந்து சித்தார்கோட்டை, அம்மாரி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம் வழியாக ராமநாதபுரம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் குறுக்கே நதிப்பாலம் அமைந்துள்ளது. நதிப்பாலத்தின் இரு ஓரங்களிலும் உள்ள தடுப்பு கற்கள் அனைத்தும் சேதமடைந்து விபத்து ஏற்படும் நிலையில் இருந்தன.நதிப்பாலத்தில் சேதமான கற்களை அகற்றி புதிய தடுப்பு அமைக்க வலியுறுத்தி தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தினமலர் செய்தி எதிரொலியாக பாலத்தின் இரு ஓரங்களிலும் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.