நாகர்கோவில்:நாகர்கோவிலில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த சிவனடியார்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் ''ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்'' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை ஒரு சதுர அடி கூட விடாமல் மீட்டு கோயில்கள் வசம் ஒப்படைப்பது. அடியார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி உதவி வழங்க வேண்டும். சைவ மதத்துக்கு எதிராக தவறான கருத்து சொல்பவர்களை மாநிலம் முழுவதும் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். ஹிந்துக்களை வஞ்சிக்கும் அரசியல் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.