தமிழ்நாடு

மீனவர்களை பாதுகாக்கும் அரசு அ.தி.மு.க.,: முதல்வர் பழனிசாமி பேச்சு

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கீழக்கரை : ''மீனவர்களை பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க., உள்ளது'' என முதல்வர் பழனிசாமி பேசினார்.கீழக்கரையில் மீனவர் சங்கங்கள், அனைத்து ஜமாத்தார்கள் கூட்டமைப்பு உடனான கலந்துரையாடலில் அவர் பேசியதாவது:இலங்கை கடற்படையினரால் முன்பு அடிக்கடி நிகழ்ந்த தாக்குதல் தற்போது கிடையாது. தமிழக மீனவர்களை முழுவதுமாக காக்கக்கூடிய அரசாக உள்ள அ.தி.மு.க., மீனவ பிரச்னைகளை மத்திய அரசிற்கு

கீழக்கரை : ''மீனவர்களை பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க., உள்ளது'' என முதல்வர் பழனிசாமி பேசினார்.

கீழக்கரையில் மீனவர் சங்கங்கள், அனைத்து ஜமாத்தார்கள் கூட்டமைப்பு உடனான கலந்துரையாடலில் அவர் பேசியதாவது:இலங்கை கடற்படையினரால் முன்பு அடிக்கடி நிகழ்ந்த தாக்குதல் தற்போது கிடையாது. தமிழக மீனவர்களை முழுவதுமாக காக்கக்கூடிய அரசாக உள்ள அ.தி.மு.க., மீனவ பிரச்னைகளை மத்திய அரசிற்கு தெரியப்படுத்தி தீர்வு காண்கிறது. சீனியப்பா தர்கா கடல் பகுதியில் துாண்டில் வளைவு அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ைஹடெக்காக புதிய மருத்துவக்கல்லுாரி கட்டப்படுகிறது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டால் இந்தாண்டு 330 பேருக்கு கல்லுாரியில் டாக்டர் சீட் கிடைக்கும்.ராமநாதபுரத்தில் 30 இடங்களில் மினிகிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படும்'' என்றார். மீனவ சங்க பிரதிநிதிகள், கீழக்கரையில் உள்ள எட்டு ஜமாத்துக்களின் நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X