பரமக்குடி : பரமக்குடியில் ஒரே நீர் ஆதாரமாக விளங்கும் வைகை ஆற்றில கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. மக்களின் கோரிக்கையால் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
பரமக்குடியில் நேற்று முன்தினம் சமுதாய தலைவர்கள், வியாபாரிகள், நெசவாளர்கள், விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். அப்போது பரமக்குடி வைகை ஆற்றில் கருவேல மரங்கள் அடர்ந்து கழிவுநீர் கலப்பதால் குடிநீர் ஆதாரம்பாதிப்பதாக தெரிவித்தனர்.காட்டுப்பரமக்குடி பகுதி தொடங்கி, ஆற்றுப்பாலம், பெருமாள் கோயில், தரைப்பாலம், காக்கா தோப்பு வரை பரமக்குடி நகராட்சி எல்லை அமைந்துள்ளது. இப்பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித் துறையினரால் ஆறு சீரமைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வந்த நாட்களில் மீண்டும் கருவேல மரங்கள் வளர்ந்தன.நேற்று முன்தினம் பரமக்குடிக்கு வந்திருந்த முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் அதிகாரிகள் மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.