பெ.நா.பாளையம்:'கோவை விழா'வின் ஒருபகுதியாக, கொரோனா முன்களப்பணியாளர்கள் 100 பேர், இலவசமாக ஹெலிகாப்டர் பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.கொரோனா தொற்று காலம் முதல் இதுவரை ஆயிரக்கணக்கான முன்களப்பணியாளர்கள், களத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 'கோவை விழா' அமைப்பினர், இவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 100 பேரை கோவை நகர் மற்றும் புறநகரை, ஹெலிகாப்டரில் சுற்றி காண்பித்தனர். துடியலுார் அருகே, வட்டமலைபாளையத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து, இந்த இலவச பயணம் மேற்கொள்ளப்பட்டது.'கோவை விழா' அமைப்பினர் கூறுகையில்,'முன்களப்பணியாளர்கள், மகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஒரு முறை, ஆறு பேர் என, 100 முன்களப்பணியாளர்கள் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டனர். மருதமலை, ஈஷா மையம், கோவையில் உள்ள முக்கிய கோவில்கள், பாரம்பரிய தளங்கள், பழமையான சந்தைகள், அழகான ஏரிகள் ஆகியவை சுற்றி காண்பிக்கப்பட்டன' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE