ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் முன்விரோதத்தில் முதியவரை தள்ளி விட்டதில், பரிதாபமாக உயிரிழந்தார்.
பாம்பன் சின்னபாலத்தைச் சேர்ந்த மீனவர் முனியசாமி80, இதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன்30, இருதரப்பினருக்கு முன்விரோதம் இருந்தது. நேற்று முனீஸ்வரன், முனியசாமி மகன் முருகனிடம் தகராறு செய்துள்ளார். இருவரையும் முதியவர் முனியசாமி சமரசம் செய்து விலகி விட்ட போது, ஆத்திரமடைந்த முனீஸ்வரன், முதியவரை கீழே தள்ளி விட்டு உள்ளார்.கல் மீது விழுந்த முதியவருக்கு தலை, உடம்பில் காயம் ஏற்பட்டது. ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது உயிரிழந்தார்.பாம்பன் போலீஸ் எஸ்.ஐ.,நாகராஜ் ,முனீஸ்வரனை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE