காரியாபட்டி : தாமிரபரணி நீரேற்று நிலையத்தை சுற்றி மாத கணக்கில் மழை நீர் தேங்கி உள்ளதால் மாசடைந்த இத்தண்ணீர் குடிநீரில் கலக்கும் அவலம் தொடர்வதால் இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .
காரியாபட்டி பணிக்குறிப்பில் 35 ஆயிரம் லிட்டர் கொண்ட தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு குடிநீராக தாமிரபரணி தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையில் நீரேற்று நிலையத்தை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. இதில் பாசி படர்ந்து மாசடைந்துள்ளது. தரைமட்ட நீரேற்று தொட்டி என்பதால் கசிவு ஏற்பட்டு குடிநீரில் கலக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவுமோ என்ற அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: குடிநீர், சமையலுக்கு தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். நீரேற்று நிலையத்தை சுற்றி பாசிபடர்ந்த தண்ணீர் சூழ்ந்துள்ளதால் குடிநீரில் கலந்து காய்ச்சல் பரவும் அச்சம் நிலவி வருகிறது. இதை அப்புறப்படுத்தி மழைநீர் தேங்காத அளவிற்கு மேடாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE