வத்திராயிருப்பு : வத்திராயிருப்பிலிருந்து தாணிப்பாறைக்கு செல்லும் வழியிலுள்ள தரைப்பாலம் சீரமைக்கபடாததால் சதுரகிரி செல்லும் பக்தர்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தமிழ் மாதம், பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.மகாராஜபுரம் விலக்கிலிருந்து 2கி.மீ., தொலைவிலுள்ள சேதமான தரைப்பாலம்பல மாதங்களாக சீரமைக்காமல் இருப்பதால் வாகன ஓட்டிகள், பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். அதிக மழை பெய்யும் போது பாலத்தை கடக்க இயலாது. அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் தரைப்பாலத்தை உடனே சீரமைக்கும் பணியை உடனே துவக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE