பொது செய்தி

தமிழ்நாடு

கோமூத்திரம் பயிர்களைக் காக்கும் சூத்திரம்: வெட்டுக்கிளிக்கு வந்தாச்சு வேட்டு

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கோவை:கோமூத்திரத்தால் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற வல்லது என, கண்டறிந்துள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன், ராஜஸ்தானில் பயிர்களை, வெட்டுக்கிளிகள் பெரும் நாசம் செய்தன. அவற்றை அழிக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில், ஆர்கானிக் பண்ணையில் பூச்சிக்கொல்லி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்மருந்தை பயிர்கள் மேல்

கோவை:கோமூத்திரத்தால் தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற வல்லது என, கண்டறிந்துள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன், ராஜஸ்தானில் பயிர்களை, வெட்டுக்கிளிகள் பெரும் நாசம் செய்தன. அவற்றை அழிக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில், ஆர்கானிக் பண்ணையில் பூச்சிக்கொல்லி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இம்மருந்தை பயிர்கள் மேல் தெளிப்பதால், பூச்சிகளால் பயிர்களை உண்ணமுடிவதில்லை. இது மத்திய வேளாண் அறிவியல் மையத்தால், அறிமுகப்படுத்தப்பட்டது.கண்டுபிடிப்பாளர் சுதர்சன் கூறுகையில், ''ஹெர்போலிவ் பிளஸ் எனப்படும் இந்த பூச்சிக்கொல்லி மருந்து, பறவைகள், விலங்குகள் மற்றும் பூச்சிகளிடம் இருந்து பயிர்களை காக்க, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பூச்சிகளை மட்டுமன்றி, பூஞ்சை நோய்களையும் கட்டுப்படுத்துகின்றன; மண் வளத்தை மேம்படுத்துகின்றன. பயிரின் சுவை மற்றும் ஆயுளை அதிகரிக்கின்றன,'' என்றார்.சாணம், பால், தயிர், புளித்த பழம் மற்றும் தாவர சாறுகள் தவிர, கோமூத்திரமும் இத்தயாரிப்பின் மூலப்பொருள். ராஜஸ்தானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில், இம்மருந்து முழுமையாக சோதிக்கப்பட்டது. மருந்து தெளிக்கப்பட்ட பின், வெட்டுக்கிளிகளிடம் இருந்து பருத்தி பயிர்களை காப்பாற்றியதாக, மத்திய வேளாண் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
வெட்டுக்கிளிகள் பொதுவாக, இரவில் பயிர்களின் மேல் வந்து அமர்கின்றன. குறுகிய காலத்திற்குள் பெரும் எண்ணிக்கையில் வேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. லட்சக்கணக்கில் இனப்பெருக்கம் செய்வதால், அது ஏற்படுத்தும் சேதமும் அதிகம்.இந்த பூச்சிக்கொல்லி மருந்து, பலவிதமான சீதோஷ்ண நிலைக்கு ஏற்றதாகவும், வெவ்வேறு பயிர்களுக்கு ஏற்றதாகவும் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தின் மாறுபட்ட சுவை மற்றும் துர்நாற்றத்தால் பூச்சிகள் விரட்டப்படுகிறன. காட்டுப்பன்றிகள், மயில்கள், யானைகள், எலிகள் மற்றும் குரங்குகளிடம் இருந்தும் பாதுகாக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X