விருதுநகர் : மாவட்டத்தில் பரவலாக பெய்யும் மழையால் 20 அடி நீர் மட்டம் கொண்ட குல்லுார்சந்தை அணை முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இதனால் ஆறு கிராமங்களில் 2891 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
விருதுநகர் அருகேயுள்ள குல்லுார்சந்தை அணை பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகிறது. 2019ல் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழைகள் கைகொடுக்காததால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யாமல் ஏமாற்றியது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 27 ல் ெதுவங்கியது. எதிர்பார்த்ததை விட கூடுதலாக மழை பெய்தது.அக்டோபரில் துவங்கி டிசம்பர் இறுதியில் முடியும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு டிசம்பரை கடந்தும் பெய்து வருகிறது.
வடக்கே பலமான காற்று தொடர்ந்து வீசி வருவதால் மேலும் பத்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிவர், புரெவி புயல்களும் தங்கள் பங்கிற்கு மழையை வாரி வழங்கி விட்டு சென்றது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான நீர் நிலைகள், கண்மாய்கள், அணைகள் நிரம்பி வருகின்றன.குல்லுார்சந்தை அணைக்கு மழை நீர், கவுசிகா நதி நீர் முக்கிய நீராதாரமாக உள்ளது.
அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் நீர் மட்டம் 18 அடிக்கும் மேலாக உயர்ந்து (மொத்தம் 20 அடி). இதனால் குல்லுார்சந்தை, சூலக்கரை, மெட்டுக்குண்டு, சென்நெல்குடி, செட்டிபட்டி, மருளுத்து உள்ளிட்ட ஆறு கிராமங்களில் 2891 கே்கர் நிலம் பாசன வசதி பெறவுள்ளது. இதன் மூலம் 2,700 டன் உணவு உற்பத்திக்கு மாவட்டவேளாண்மைத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE