அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆன்மிக ஆட்சி நடத்தும் வல்லமை அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே உள்ளது'

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கோவை:''ஆன்மிக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை, அ.தி.மு.க., வுக்கு மட்டுமே உள்ளது,'' என, கோவையில் நடந்த விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின், 44வது செயற்குழு கூட்டம் கோவை காந்திபார்க்கில் நடந்தது.பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:விஸ்வகர்மா சமுதாய மக்கள் யார் பக்கம் நிற்கிறார்களோ, அவர்கள் வெற்றி

கோவை:''ஆன்மிக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை, அ.தி.மு.க., வுக்கு மட்டுமே உள்ளது,'' என, கோவையில் நடந்த விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின், 44வது செயற்குழு கூட்டம் கோவை காந்திபார்க்கில் நடந்தது.பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:விஸ்வகர்மா சமுதாய மக்கள் யார் பக்கம் நிற்கிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்று ஆளக்கூடிய தகுதியை பெறுவர். தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என மனு கொடுத்த உடன், 110 விதியின் கீழ், அதை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அ.தி.மு.க., ஆட்சி அமைய விஸ்வகர்மா சமூகம் அணில் போல இருக்க வேண்டும்.ஆன்மிக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை, அ.தி.மு.க., வுக்கு மட்டுமே உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு ஒரு படிக்கல்லாக நாம் இருந்தோம் என, வரலாறு பேச வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு, என்ன கேட்டாலும் அரசு சார்பில் செய்து தருவோம்.தி.மு.க.,வினர் எங்கு சென்றாலும், தகராறு, அடிதடியில் ஈடுபடுகின்றனர். பெண்களை தாக்குவது தி.மு.க.,வுக்கு தொழிலாக போய்விட்டது. சாமி கும்பிடாத ஸ்டாலின், எதற்காக தொண்டாமுத்துாரில் பெருமாள் கோவிலை அடைத்து கூட்டம் போட வேண்டும்.வெற்றியின் சின்னம் இரட்டை இலை. எந்த நாட்டில் யார் வெற்றி பெற்றாலும் இரட்டை விரலை தான் காட்டுகிறார்கள்.இவ்வாறு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.சங்க மாநில தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X