தமிழ்நாடு

சிரமம்! தேனி மாவட்டத்தில் 756 வேக தடைகளால்..

Added : ஜன 04, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் 756 வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.தேனி மாவட்ட சாலைகளில் புற்றீசல்கள் போல் அனுமதியின்றி வேகத்தடைகள், வேகத்தடுப்புகள் அதிகம் உள்ளன. அனுமதியுடன் வேகத்தடை 0.10 மீ. உயரம், 2 மீ அகலத்தில் அமைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலனவை உயரமாக உள்ளது. பெரியகுளம் - தேனி 15 கி.மீட்டரில் 10, தேனி- கண்டமனுார் 14

தேனி : தேனி மாவட்டத்தில் 756 வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

தேனி மாவட்ட சாலைகளில் புற்றீசல்கள் போல் அனுமதியின்றி வேகத்தடைகள், வேகத்தடுப்புகள் அதிகம் உள்ளன. அனுமதியுடன் வேகத்தடை 0.10 மீ. உயரம், 2 மீ அகலத்தில் அமைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலனவை உயரமாக உள்ளது. பெரியகுளம் - தேனி 15 கி.மீட்டரில் 10, தேனி- கண்டமனுார் 14 கி.மீட்டரில் 25 வேகத்தடைகள் உள்ளன. இரும்பு வேகத்தடுப்புகளும் உள்ளன. இதுபோல் பல இடங்களில் உள்ளன.

தேசிய சுற்றுலா தலங்களான மூணாறு, தேக்கடிக்கு தேனி மாவட்டத்தை கடந்து செல்லும் போது வாகனங்கள் அடிக்கடி பழுதாகிறதுஅளவில்லா வேகத்தடை:மாவட்டம் முழுவதும் உள்ள வேகத்தடை எத்தனை என சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன்தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரினார். இதற்கு நெடுஞ்சாலை துறை பதிலில் வேகத்தடை விபரம் அதிர்ச்சியளிக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை மதுரை -கொச்சி சாலையில் உசிலம்ப்டி கணவாய் டூ போடி முந்தல் வரை 40 கி.மீ துாரத்தில் 5 வேகத்தடைகள், 30 வேகத்தடுப்புகள் உள்ளன.தேனி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர், 'மாநில சாலையில் 189, மாவட்ட முக்கிய சாலையில் 212, கிராம சாலைகளில் 355 என 756 வேகத்தடைகள் உள்ளன. இதில் 640 இடத்தில் எச்சரிக்கை பலகையும், 116 இடங்களில் எச்சரிக்கை பலகை இல்லை என்றார்.

ஆலோசிப்பது இல்லை:

சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன், '' பல வேகத்தடைகள் முறையாக இல்லை. போலீசார் உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு என வேகத்தடுப்பு வைத்தாக கூறுகின்றனர். 3 மாதத்திற்கு ஒருமுறை சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடத்தி கருத்துக்களை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X