பொது செய்தி

தமிழ்நாடு

மண் குத்துதல், நீச்சல், ஓட்டப்பயிற்சிகளுடன் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் தேனி காளைகள்

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார் படுத்த நீச்சல், ஓட்டம், நடை, மண்குத்துதல் என தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு விமர்சையாக நடக்கும். இதில் மாவட்டத்தில் உள்ள காளைகள் மட்டு மின்றி பிற மாவட்ட காளைகளும் களமிறங்கி வீரர்களை பந்தாடும். இக்காளைகள் அலங்காநல்லும்,
 மண் குத்துதல், நீச்சல், ஓட்டப்பயிற்சிகளுடன்  ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் தேனி காளைகள்

தேனி : தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார் படுத்த நீச்சல், ஓட்டம், நடை, மண்குத்துதல் என தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு விமர்சையாக நடக்கும். இதில் மாவட்டத்தில் உள்ள காளைகள் மட்டு மின்றி பிற மாவட்ட காளைகளும் களமிறங்கி வீரர்களை பந்தாடும். இக்காளைகள் அலங்காநல்லும், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகளில் விளையாடி பரிசுகளை குவிக்கும்.

ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல், நீண்ட நேரம் நின்று விளையாட மண் குத்துதல், நீச்சல், ஓட்டம், உடல் திறன் மேம்பாடு, நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி, சிறப்பு உணவு முறை என ஜல்லிகட்டு காளை வளர்ப்போர் பயிற்சி அளிக்கின்றனர். தேனி அல்லிநகரம் பைபாஸ் ரோட்டில் உள்ள தோட்டங்களில் 45 காளைகளின் உரிமையாளர்கள் தனித்தனியாக தங்களது 'காளை'களை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகின்றனர்.


வலுச்சேர்க்கும் உணவு

தேனி சதீஸ் 27, ஜம்மு உதம்பூரில் ராணுவ போதைப் பொருள் தடுப்புப்பிரிவு வீரர். தேனியில் காளை வளர்த்து வருகிறார். அவர் கூறியதாவது: ''காலை மாலை வைக்கோல், பசுமை தீவனத்திற்கு மேய்ச்சலுடன் இடையில் தண்ணீருக்கு விடுவோம். உணவாக பருத்தி விதை, பச்சரிசி, இரும்புச்சோளம், கொப்பரை தேங்காய் என இரண்டரை கிலோ தீவணத்தை தேவைக்கு ஏற்ப வழங்குகிறோம். இதனால் காளையின் நெஞ்சுப்பகுதி விரிந்து கம்பீரம் அதிகரிக்கும். பனிக்காலத்தில் சளி, இதர தொந்தரவு இல்லாமல் இருக்க 'மிளகாய் உருண்டை' வழங்குவோம்.

வாரம் இரு முறை நீச்சல் பயிற்சி, தினசரி நடை, ஓட்டம், மண் குத்துதல் பயிற்சிகளை வழங்குகிறோம். செயல்திறனை அதிகரிக்க விடக்கோழியை தீயில் வாட்டி, எலும்பு இல்லாமல் இறைச்சியை மட்டும் தனியாக பிரித்து, மூங்கில் இலைகளை அதனுடன் வைத்து நைத்து அதில் வரும் சாற்றை காளைக்கு வழங்குவோம். காளையின் உடல் திறன் மேம்படும். வாடிவாசலில் மாடுபிடி வீரர்கள் காளையின் அருகில் நெருங்கவே முடியாது. இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் உள்ளூர் காளைகளுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.'', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X