பொது செய்தி

தமிழ்நாடு

கம்பம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை சரிவு

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கம்பம் : கம்பம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டு உள்ளது.தேனி மாவட்ட உழவர் சந்தைகளில் அதிக காய்கறி வரத்து, விற்பனை என்பதில் கம்பம் முதலிடத்தை பிடித்தது. மற்ற உழவர் சந்தைகள் பெயருக்கு செயல்படுகிறது. கம்பம் உழவர் சந்தையில் 110 கடைகளும்,வெளியே ரோட்டின் இருபக்கமும் 20 க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்துள்ளனர். தினமும் 50 டன் காய்கறி வரத்து இருக்கும். சில

கம்பம் : கம்பம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டு உள்ளது.தேனி மாவட்ட உழவர் சந்தைகளில் அதிக காய்கறி வரத்து, விற்பனை என்பதில் கம்பம் முதலிடத்தை பிடித்தது. மற்ற உழவர் சந்தைகள் பெயருக்கு செயல்படுகிறது.

கம்பம் உழவர் சந்தையில் 110 கடைகளும்,வெளியே ரோட்டின் இருபக்கமும் 20 க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்துள்ளனர். தினமும் 50 டன் காய்கறி வரத்து இருக்கும். சில விசேஷ நாட்களில் மேலும் கூடுதலாக விற்கும். பிப். 3 ல் 52 டன் காய்கறி விற்பனையாகியுள்ளது. கொரோனா காரணமாக மார்ச் மாதம் உழவர் சந்தை மூடப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட போதும், 50 சதவீத கடைகள் அனுமதிக்கப்பட்டது.

தற்போது முழு அளவில் கடைகள் அனுமதித்தும் வரத்தும் குறைந்து, விற்பனையும் குறைந்துள்ளது. கம்பம் உழவர் சந்தையை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சிக்கே வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் உழவர் சந்தை மூடுவிழா காண நேரிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X