கம்பம் : சீதோஷ்ண நிலையில் மாற்றம் பனி, மேகமூட்டம் நிலவுவதால் கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சையில் செவட்டை நோய் தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டுமுழுவதும் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது. டிசம்பரில் துவங்கி மார்ச் வரை மகாராஷ்டிரா விதையில்லா திராட்சை தமிழகத்தில் விற்பனைக்கு வரும். 4 மாதங்களில் கம்பம் பள்ளத்தாக்கு திராட்சைக்கு விலை கிடைக்காது.இந்த 4 மாதங்களில் கடும் பனிப்பொழிவு இருப்பதால், செவட்டை நோய் தாக்கி விவசாயிகள் அவதிப்படுவர். தற்போது சில நாட்களாக உச்சபட்ச பனியும், மேகமூட்டமுமாக இருப்பதால், கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சையில் கடும் செவட்டை நோய் தாக்கியுள்ளது.
இலைக்கருகல், காம்பு கருகி, பழங்கள் சுருங்கி வருகிறது. விடாமல் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடித்தும் பயனில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.பரமசிவம், திராட்சை விவசாயி, காமயகவுண்டன்பட்டி: 'செவட்டை தாக்குதல் உச்சத்தில் உள்ளது. விளைச்சல் இருந்தும் பலனில்லை. பழங்கள் சுருங்குகிறது. என்ன செய்வது என தெரியவில்லை. மகாராஷ்டிரா பழம் வந்துள்ளதால், இங்கு விலையும் குறைந்துள்ளது' என்று கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE