தேனி : தேனியில், தமிழ்நாடு அனைத்து வகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பணியாளர்கள் யூனியன் சார்பில், மாநில பேரவைக் கூட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் (தெற்கு) முருகன் தலைமை வகித்தார். செயலாளர் அன்னக்கொடி வரவேற்றார். மாநிலத் தலைவர் செல்வராஜ், பொதுச் செயலாளர் சக்திவேல்கனகரத்தினம், இணைச் செயலாளர் வெங்கட்டராமன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் நாகராஜ், மாவட்ட, மண்டலப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பணியாளர்கள் 5 ஆண்டுகளாக சம்பளமின்றி தவிக்கின்றனர். பணியாளர்கள் சம்பளம் எடுத்ததற்காக கைற்றப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும். லாபத்தில் செயல்படும் சங்கத்தில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தித் தர வேண்டும் என 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE