இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்கேரளாவில் சொகுசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலிகாசர்கோடு: கேரளாவில், வீட்டின் மீது சொகுசு பஸ் விழுந்ததில், கர்நாடகாவைச் சேர்ந்த ஏழு பேர், பரிதாபமாக இறந்தனர்.பலர் காயம் அடைந்தனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமை யிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கர்நாடக மாநிலம் சுல்லியா பகுதியைச் சேர்ந்த 65 பேர், கேரள மாநிலம்
today, crime, round up, இன்றைய கிரைம், ரவுண்ட் அப், இந்தியா, தமிழகம், உலகம்


இந்திய நிகழ்வுகள்

கேரளாவில் சொகுசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி
காசர்கோடு: கேரளாவில், வீட்டின் மீது சொகுசு பஸ் விழுந்ததில், கர்நாடகாவைச் சேர்ந்த ஏழு பேர், பரிதாபமாக இறந்தனர்.


latest tamil news


பலர் காயம் அடைந்தனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமை யிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கர்நாடக மாநிலம் சுல்லியா பகுதியைச் சேர்ந்த 65 பேர், கேரள மாநிலம் காசர்கோடில் நடக்கும் திருமணத்துக்காக, நேற்று சொகுசு பஸ்சில் வந்தனர்.

காசர்கோடு அருகே பனாத்துார் பகுதியில், மலைப் பாதையில் வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில், பஸ்சில் பயணம் செய்த, ஏழு பேர் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

ஜி.எஸ்.டி., ஏய்ப்பு செய்ததாக 7000 வழக்குகள் பதிவு: 185 பேர் கைது

புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்த, 7,000 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 185 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தீவிர சோதனைநாடு முழுதும் ஒரே சீரான வரி முறையான, ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, சாதனை அளவாக, கடந்த டிச., மாதத்தில், 1.15 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.


தமிழக நிகழ்வுகள்

காட்டுயானை துரத்தியதில் பெண் காயம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, யானை துரத்தியதில், பெண் படுகாயம் அடைந்தார்.பந்தலுார் அருகே, சேரங்கோடு டான்டீ செம்பகொல்லி பகுதியில் குடியிருப்பவர் ஆறுமுகம். இவரது மகள் லாவண்யா, 20. இவர் நேற்று காலை,6:-30 மணிக்கு வீட்டிற்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த யானை ஒன்று, அவரை துரத்தி உள்ளது. யானையின் பிளிறல் சப்தம் கேட்டு தப்பி ஓடிய லாவண்யா, வீட்டிற்கு அருகே விழுந்தார். இதனால், பலத்த காயம் ஏற்பட்டது.

தந்தை இறந்த துக்கம்: மகள் தற்கொலை

நாகர்கோவில்: சுசீந்திரம் அருகே குலசேகரன்புதுார் நெய்தல் தெரு விஜயகுமார், உடல் நலக்குறைவால் இறந்ததால் மனம் உடைந்த அவரது மகள் உமா மகேஸ்வரி 19, துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

மின்சாரம் தாக்கி பெண் பலி

குன்னத்துார், வெள்ளரவெளியை சேர்ந்தவர் இளங்கோ, 23; இவரது மனைவி உமா மகேஸ்வரி, 20. இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, காதலித்தனர்; ஓர் ஆண்டு முன்பு திருமணம் செய்தனர். ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடுபடுத்த முயன்றபோது, மின்சாரம் தாக்கி, உமாமகேஸ்வரி, நேற்று பலியானார். குன்னத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news


மதுக்கடையில் தீவிபத்து
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே உள்ள மருந்து கடையில் மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மது, புகையிலை விற்ற 95 பேர் கைது
கோவை:மது, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட, 95 பேரை போலீசார் கைது செய்தனர்.பீளமேடு, சிங்காநல்லுார், உக்கடம், ராமநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக திண்டுக்கல்லை சேர்ந்த மகேஸ்வரன், 42, சிவகங்கையை சேர்ந்த வேல்முருகன், 21, ராமநாதபுரத்தை சேர்ந்த ராம்பிரகாஷ், 23 உள்ளிட் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசி கேட்டு பேக்கரி சூறை

ஆவடி : ஆவடியில், 'ஓசி கேக்' கேட்டு, பேக்கரியை சூறையாடிய வாலிபர்கள் ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

கழுத்தளவு சேற்றில் சிக்கிய மூதாட்டி மீட்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஓரிக்கை ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர், தன் மகன் சந்திரசேகரன் வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று காலை, வீட்டு பின்புறத்தில் உள்ள குட்டைக்கு சென்ற மூதாட்டி, சேற்றில் சிக்கினார். பாட்டியை தேடி வந்த பேரன், கழுத்தளவு சேற்றில் அவர் சிக்கியதை பார்த்து, தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.அங்கு வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள், மூதாட்டியை மீட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


உலக நிகழ்வுகள்

11 தொழிலாளர்கள் பலி

கராச்சி: பாகிஸ்தானின், தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில், சுரங்க பணிக்கு சென்ற, 11 தொழிலாளர்களை, துப்பாக்கி ஏந்திய கும்பல், நேற்று கடத்திச் சென்றனர். அவர்களை, மச் என்ற மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், ஆறு பேர், சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஐந்து பேர், மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தனர்.

கோவில் சூறை: 8 போலீசார் 'சஸ்பெண்ட்'

பெஷாவர்: பாகிஸ்தானின், கைபர் பாக்துன்வா மாகாணம், கரக் மாவட்டத்தின், டெர்ரி கிராமத்தில், ஹிந்து கோவில் ஒன்று, வன்முறை கும்பலால், சமீபத்தில் சேதப்படுத்தப்பட்டது. இதில், 350 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஏற்கனவே, 55 பேரை கைது செய்த நிலையில், மேலும், 45 பேரை, நேற்று கைது செய்தனர். இந்நிலையில், கோவில் இடிக்கப்பட்ட போது, அந்த பகுதியில் பணியில் இருந்த, எட்டு போலீஸ் அதிகாரிகள், நேற்று அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

அமெரிக்க குண்டு வெடிப்பில் துப்பு

நாஷ்வில்: அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் நகரில், கிறிஸ்துமஸ் தினமான, கடந்த, 25ம் தேதி, வெடிகுண்டு வெடித்தது. இதில், வெடிகுண்டை வெடிக்க செய்த, ஆன்டனி வார்னர், 63, என்பவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். அப்பகுதியில் பெரும் பொருட் சேதம் ஏற்பட்டது. மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஆன்டனி வார்னர், தன் கருத்துக்களை வெளிபடுத்தும் வகையில், தனக்கு அறிமுகமான சிலருக்கு, தபாலில் சில பொருட்களை அனுப்பியுள்ளார். அது கிடைக்க பெறுபவர்கள், உடனடியாக, போலீசை தொடர்பு கொள்ளும்படி, விசாரணை அதிகாரி, ஜேசன் பேக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X