பீஹார் மருத்துவமனைகளில் 'அக்கா உணவகம்' திறப்பு

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
பாட்னா: பீஹாரில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 'அக்கா உணவகம்' என்ற பெயரில், மலிவு விலை உணவகங்களை திறக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 'தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகம் போல், அரசு மருத்துவமனைகளில், மலிவு விலையில் உணவு வழங்க, 'தீதி கி ரசோய்' எனப்படும்,

பாட்னா: பீஹாரில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 'அக்கா உணவகம்' என்ற பெயரில், மலிவு விலை உணவகங்களை திறக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news


பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 'தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகம் போல், அரசு மருத்துவமனைகளில், மலிவு விலையில் உணவு வழங்க, 'தீதி கி ரசோய்' எனப்படும், அக்கா உணவகம் திறக்கப்படும்' என, தே.ஜ., கூட்டணி, பீஹார் சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது.

இதையடுத்து, வைஷாலி மாவட்ட மருத்துவமனையில், மாநிலத்தின் முதல், அக்கா உணவகம் திறக்கப்பட்டது. முற்றிலும் பெண்களாலேயே, இந்த உணவகம் நடத்தப்படுகிறது.இந்த உணவகத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து, மேலும் ஆறு மாவட்ட மருத்துவமனைகளில் அக்கா உணவகம் திறக்கப்பட்டது.இந்நிலையில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அக்கா உணவகம் திறக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.


latest tamil news


இது குறித்து, பீஹார் அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மாவட்ட மருத்துவமனைகள் அனைத்திலும் அக்கா உணவகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவது ஒரு சவாலாகவே உள்ளது. அக்கா உணவகம் திறக்கப்பட்ட மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு மலிவு விலையில், தரமான உணவு வழங்கப்படுகிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜன-202116:51:14 IST Report Abuse
Endrum Indian எந்த காலத்திலும் இலவசம் கொடுக்காதே அது நாசவழியில் செல்லும், அதற்கு பதிலாக அவன் உழைத்து பிழைக்க வேலை வாய்ப்பு உள்ள தொழிற்சாலைகள் போன்றவற்றை உருவாக்கு நாடு சீரான வழியில் செல்லும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜன-202116:47:25 IST Report Abuse
Endrum Indian அம்மா உணவகம் நாசமாகப்போனது இப்போ அக்காவின் உணவகம் சில வருடங்கள் கழித்து அவ்வாறே ஆகும். ஆனால் வேடிக்கை டாஸ்மாக்கினாட்டில் என்ன என்ன ஸ்கீம் அறிவிக்கின்றார்களோ அதே ஸ்கீம் வடநாட்டில் சில வருடம் கழித்து அச்சு பிசகாமல் வெளியாகின்றது எல்லோருக்கும் முன்னோடி இந்த டாஸ்மாக் நாடு தான் ????நாசவழியில் செல்ல ???
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
04-ஜன-202116:12:15 IST Report Abuse
vbs manian அம்மா உணவகத்தில் நூறு கோடி நஷ்டம் என்று சொல்கிறார்கள். வள்ளலார் கூட அண்ண தான கைங்கர்யத்தில் ஈடுபட்டு முடியாமல் கைவிட்டதாக படித்த ஞாபகம்.அரசு ஒரு நிர்வாக அமைப்பு. தர்ம சத்திரம் அல்ல. கோவில்களில் உணவு வழங்க மான்யம் அளிக்கலாம். திருப்பதியில் நன்றாக செயகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X