பைடன் வெற்றியை எதிர்க்கும் டிரம்ப் ஆதரவு எம்.பி.,க்கள்

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கக் கோரி, பார்லி., கூட்டுக் கூட்டத்தில் பிரச்னை எழுப்ப, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.வழக்குஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், கடந்தாண்டு, நவ., 3ல் நடந்தது. அதில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும், 20ம் தேதி அவர்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கக் கோரி, பார்லி., கூட்டுக் கூட்டத்தில் பிரச்னை எழுப்ப, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.



latest tamil news


வழக்குஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், கடந்தாண்டு, நவ., 3ல் நடந்தது. அதில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும், 20ம் தேதி அவர் முறைப்படி, அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.இந்தத் தேர்தல் முடிவுகளை, அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார்.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. தேர்தலில் மோசடிகள் நடந்ததாக அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். அவர் தொடர்ந்த வழக்குகளில், பெரும்பாலானவை தள்ளுபடி செய்யப்பட்டன; மீதமுள்ளவை திரும்பப் பெறப்பட்டன. உச்ச நீதிமன்றமும், டிரம்பின் மனுக்களை தள்ளுபடி செய்தது.இந்நிலையில், பார்லி.,யின் கூட்டுக் கூட்டம், 6ம் தேதி நடக்க உள்ளது. கேள்விஅதிபர் தேர்தலில், 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் மாகாணப் பிரதிநிதிகளின் ஓட்டுக்களை ஏற்பது மற்றும் ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்வதற்காக இந்தக் கூட்டம் நடக்க உள்ளது.


latest tamil news


இந்தக் கூட்டத்தின்போது, தேர்தல் முடிவுகளை எதிர்த்து பிரச்னை எழுப்ப, டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களான, 11 எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர். 'தேர்தலில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை கமிஷன் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பிரச்னை எழுப்புவோம்' என, அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளனர்.டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த, பல, எம்.பி.,க்கள், இந்த முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.
'நம் ஜனநாயக நடைமுறையை எதிர்ப்பதாக இந்த நடவடிக்கை அமைந்து விடும்' என, அவர்கள் கூறியுள்ளனர்.இதற்கிடையே, பார்லிமென்டின் செனட் சபையின் தலைவர் என்ற முறையில், தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டிய பொறுப்பு, துணை அதிபர் மைக் பென்சுக்கு உள்ளது. ஜோ பைடன் வென்றதாக அவர் அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஜன-202113:53:56 IST Report Abuse
தமிழவேல் இந்த ஆளு கொளுத்திப்போட்டுட்டுப் போய்டுவாரு, அது காலத்துக்கும் புகைஞ்சிகிட்டு இருக்கணும்ல.....
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
04-ஜன-202111:08:30 IST Report Abuse
ShivRam ShivShyam கண்டிப்பாக தெரிவிக்கவேண்டும் ..தபால் வாக்குகள் மக்கள் தொகையை (வாக்களிக்கும்) விட அதிகமாக இருப்பது நிச்சயம் கோல்மால் நடந்தை உறுதி செய்கிறது ...மேலும் அமெரிக்காவிற்கு உடனடி தேவை EVM .. உடனடியாக அதை அமுல்படுத்தினால் உண்மையான வெற்றி யாருடையது என தெரியும் ..
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஜன-202113:55:25 IST Report Abuse
தமிழவேல் இங்கே இருக்கிறாப்போல, அங்கேயும் கோமாளிங்க இருக்கத்தான் செய்றாங்க... அவுங்களுக்கெல்லாம் கோர்ட்டை விட புத்திசாலித்தனம் அதிகம்னு நெனப்பு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X