பொது செய்தி

இந்தியா

கங்குலிக்கு என்னாச்சு? : டாக்டர்கள் விளக்கம்

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கோல்கட்டா: 'இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளது' என, டாக்டர்கள் தெரிவித்துஉள்ளனர்.மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் வசித்து வரும், பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு, 48, நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டது.

கோல்கட்டா: 'இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளது' என, டாக்டர்கள் தெரிவித்துஉள்ளனர்.



latest tamil news


மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் வசித்து வரும், பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு, 48, நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டது. கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் பரிசோதனையில், அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு, 'ஆஞ்சியோபிளாஸ்டி' எனப்படும், இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கங்குலியின் உடல் நிலை குறித்து, டாக்டர்கள் நேற்று கூறியதாவது:கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளது. அவர் சுய நினைவுடன் இருக்கிறார். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இயல்பாக உள்ளது. அவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட வேண்டுமா என்பது பற்றி, ஆலோசித்து வருகிறோம்.


latest tamil news


இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. கங்குலி இப்போது இயல்பாக உள்ளார். அவரது உடல் நிலை குறித்து கவலை தேவையில்லை. இவ்வாறு, டாக்டர்கள் கூறினர்.இதற்கிடையில், மருத்துவமனை முன் நேற்று காலை குவிந்த ரசிகர்கள், 'கங்குலி விரைவில் குணமடைய வேண்டும்' என, பிரார்த்தனை செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜன-202116:15:51 IST Report Abuse
Endrum Indian எப்படி எல்லாம்??? எதிலும்?? அரசியல் செய்யலாம் தெரிந்து கொள்ளுங்கள் : "சவுரவ் கங்குலியை அரசியலில் சேரக் கோரி அதிகமான நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்கப்பட்டதால் மாரடைப்பு வந்திருக்கலாம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார்.
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
04-ஜன-202114:46:12 IST Report Abuse
Rajasekaran மருத்துவ ரீதியாக, அவரது முன்னோர்களுக்கு இருதய கோளாறு இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அதனால் தான் இருதய சிகிச்சை நிபுணர்கள், இந்த மாதிரி நோய்க்கு ஆளானவர்களை நேர் காணும் சமயங்களில் அவர்களது குடும்பத்தில் ரத்த சம்பந்தமுள்ளவர்கள் எவருக்கேனும் , இருதய நோய் இருந்ததா என விசாரிப்பது ஒரு வழிமுறையாக உள்ளது.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
04-ஜன-202113:19:33 IST Report Abuse
Suppan எங்கள் எண்ணெயை உபயோகப் படுத்தினால் உங்கள் இதயத்து நல்லது என்ற பிராண்டுக்கு இவர் தூதர்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஜன-202105:51:51 IST Report Abuse
 Muruga Velகலைஞர் டீவியில் அமேசான் காடுகளில் விளையும் அரிய வகை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணை விளம்பரம் இமான் அண்ணாச்சி செய்வதை பார்த்ததில்லையா .. ஜோஹி சாவ்லா தலை முடி கருகரு என்று வளர விளம்பரம் செய்வதை பார்த்ததில்லையா .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X