பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் போன்று மாத ஊதியம் வழங்க கோரிக்கை

Added : ஜன 04, 2021
Share
Advertisement
சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைமைச் செயலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் சுதா மணிரத்தினம் தலைமையில் முதல்வர், தனிப்பிரிவு அலுவலகம், தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளில் அளித்துள்ள மனு: எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள்


சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைமைச் செயலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கூட்டமைப்பின் தலைவர் சுதா மணிரத்தினம் தலைமையில் முதல்வர், தனிப்பிரிவு அலுவலகம், தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளில் அளித்துள்ள மனு: எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் போன்று ஊராட்சி தலைவர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தது 25 பசுமை வீடுகள் வழங்க வேண்டும். ஊராட்சிகளுக்கு வர வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும்.

அமர்வு படி, பயணப் படிகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.ஊராட்சி தலைவர்கள் கவிசந்திரன், சுகந்தி பழனிசாமி, ஆனந்தகுமாரி சதிஷ், சிவகாசி கலியமூர்த்தி, ராஜவேல், பாக்யராஜ், சபிகுர் ரகுமான், இளையபெருமாள், ரேவதி சந்திரமோகன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X