காங்., பிரமுகரை கொலை செய்ய முயற்சி: இருவர் கைது| Dinamalar

காங்., பிரமுகரை கொலை செய்ய முயற்சி: இருவர் கைது

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021
Share
புதுச்சேரி : காங்., பிரமுகரை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர். கோரிமேடு இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, திலாஸ்பேட்டை கனகன் ஏரி, மருத்துவ கல்லுாரி மதில் அருகே நின்றிருந்த கும்பல், போலீசாரை கண்டதும் ஓடியது. அவர்களில், இருவரை போலீசார்

புதுச்சேரி : காங்., பிரமுகரை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர். கோரிமேடு இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, திலாஸ்பேட்டை கனகன் ஏரி, மருத்துவ கல்லுாரி மதில் அருகே நின்றிருந்த கும்பல், போலீசாரை கண்டதும் ஓடியது. அவர்களில், இருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், சண்முகாபுரம், வடக்கு பாரதிபுரத்தைச் சேர்ந்த ரவுடி மார்ட்டின், 28; அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்,20; என்பதும், தப்பியோடியது வாணரபேட்டை ஸ்டீபன், மூலக்குளம் தமிழ்வாணன், மடுவுபேட் வெங்கடேசன் என்பதும் தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்த கத்தி மற்றும் வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர்.தொடர் விசாரணையில், ரவுடி மார்ட்டினை, கதிர்காமம் தொகுதி காங். பிரமுகர் ரமேஷ், காங்., கட்சியில் இணைந்து பணியாற்ற கூறினார். இல்லை என்றால், கடும் நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டினார். மேலும், அவரது ஆதரவாளர் ராமு மூலமும் காங்., கட்சியில் இணைய வற்புறுத்தி வந்தார்.இதனால், ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டு, கத்தியுடன் காத்திருந்தது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மார்ட்டின், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ஸ்டீபன், தமிழ்வாணன், வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X