ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம் நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் 8 மற்றும் 10 வது வார்டு சார்பில் நடந்த கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலர் தங்க ஆனந்தன் தலைமை தாங்கினார்.மேற்கு ஒன்றிய செயலர் கோவிந்தராஜன், மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம், நகர தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித் தனர். நகர செயலர் செல்வகுமார் வரவேற்றார்.மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. சிலிண்டர் வாங்க மக்களிடம் பணம் இல்லை. கடந்த தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடித்தீர்கள்.
அ.தி.மு.க ஆட்சியில் ரேஷன் பொருட்கள் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. கெரோனா காலத்தில் மக்கள் சிரமத்தில் இருந்த போது ரூ. 1,000 மட்டும் வழங்கிய அ.தி.மு.க., அரசு, தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க ரூ. 2,500 வழங்குகிறது.அ.தி.மு.க ஆட்சி வந்தால் மட்டுமே புயல், வெள்ளம், மழையால் மக்கள், விவசாயிகள் பாதிக்கின்றனர். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறி கொள்ளையடிக்கின்றனர்.அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் அனைத்தும் வீணாகி விட்டன.
இதில் பெரிய ஊழல் நடந்துள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மக்கள் குறைகள் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாணவரணி சதீஷ்குமார், சாமிநாதன், ஒன்றிய பொருளாளர் சிவஞானம், இளைஞரணி பழனிசாமி, நிர்வாகிகள் ராமலிங்கம், குமார், குமரேசன், செந்தில், இளையபெருமாள், வீரமணி, கனகசபை, நாகராஜ் பங்கேற்றனர்.வார்டு செயலர் பார்த்திபன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE