பொது செய்தி

இந்தியா

‛கன்டெய்னரில்' தற்காலிக வீடு: போராட்ட விவசாயி புதுமை

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லியில் போராடும் விவசாயிகளில் ஒருவர், தன், 'கன்டெய்னர்' லாரியில் தற்காலிக வீடு அமைத்து, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள், 40 நாட்களாக டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள பஞ்சாபின் ஜலந்தரைச்
farmer, protest, container, home, டில்லி, போராட்ட விவசாயி, கன்டெய்னர்,வீடு, மாற்றம்

புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லியில் போராடும் விவசாயிகளில் ஒருவர், தன், 'கன்டெய்னர்' லாரியில் தற்காலிக வீடு அமைத்து, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள், 40 நாட்களாக டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள பஞ்சாபின் ஜலந்தரைச் சேர்ந்த ஹர்பிரீத் சிங் மாட்டு, அவரது 'கன்டெய்னர்' லாரியை வீடு போல் மாற்றம் செய்து, போராட்ட களத்துக்கு, அதை எடுத்து வந்துள்ளார்.

இந்த தற்காலிக வீட்டில், இருக்கை, படுக்கை, நவீன கழிப்பறை, 'டிவி' உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. அவரது மனைவி, மகன், மருமகன் மற்றும் உதவியாளர்களும் அங்கு வந்துள்ளனர்.


latest tamil news


இதுகுறித்து, ஹர்பிரீத் சிங் கூறியதாவது:அமெரிக்காவில் வசிக்கும் என் சகோதரர் உத்தரவின்படி, போராட்டத்தில் பங்கேற்கிறேன். முதலில் ஏழு நாட்கள் போராட்டத்தில் பங்கேற்றபோது, ஓட்டலில் தங்கினேன்.அப்போது, குடும்பத்தினரை பிரிந்து இருந்ததால், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டேன். இதனால் என் கன்டெய்னர் லாரிகளில் ஒன்றை வீடாக மாற்றினேன். இதற்கு ஒன்றரை நாள் தேவைப்பட்டது; என் நண்பர்களும் உதவினர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
04-ஜன-202119:20:29 IST Report Abuse
Anand இவனா விவசாயி? அவர்களிடம் வழிப்பறி செய்து வாழும் கேடி....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஜன-202118:08:05 IST Report Abuse
J.V. Iyer இவர்கள் ஏழை விவசாயிகளா..
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜன-202117:03:08 IST Report Abuse
Endrum Indian இவிங்க தான் ஏழை விவசாயிகள் எல்லாம் மோடியின் இந்து செகுலர் டோலெராண்ட் எண்ணங்களினால் வருவது "தவறு கண்டேன் சுட்டேன் " என்று சட்டம் வரும் வரை இந்திய நாடு உயரவே உயராது இதே அதல விதல சுதல ரஸாதல மஹாதல பாதாள லோகத்தில் தான் இருக்கப்போகின்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X