கவர்னர் மீது அடுக்கடுக்கான புகார் மத்திய அமைச்சரிடம் முதல்வர் மனு

Added : ஜன 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டியை, முதல்வர் நாராயணசாமி சந்தித்து மனு அளித்தார். மனுவில்; புதுச்சேரி மக்கள் நலனுக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார். அமைச்சரவை எடுத்த முடிவு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுகிறார். அமைச்சரவை, முதல்வர், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஆதாரத்தை வழங்குவது இல்லை. அரசு

புதுச்சேரி : புதுச்சேரி வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டியை, முதல்வர் நாராயணசாமி சந்தித்து மனு அளித்தார்.

மனுவில்; புதுச்சேரி மக்கள் நலனுக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார். அமைச்சரவை எடுத்த முடிவு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுகிறார். அமைச்சரவை, முதல்வர், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஆதாரத்தை வழங்குவது இல்லை. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கிய நிதிக்கு அனுமதி வழங்க மறுக்கிறார்.கவர்னரின் தலையீட்டால் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த கால தாமதமாகிறது. மத்திய அரசுக்கு நேரடியாக கடிதம் எழுதி நிதியை தடுத்து நிறுத்துகிறார்.

போலீஸ், கிராம நிர்வாக அதிகாரி, எல்.டி.சி., யு.டி.சி. பணியிடங்களை நிரப்ப விடாமல் தாமதப்படுத்துகிறார்.கவர்னரின் செயல்பட்டால் மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. கவர்னர் புதுச்சேரியில் தொடர்ந்து இருப்பது, மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், பாரபட்சமின்ற நிதி ஒதுக்க வேண்டும்.15வது நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரிக்கான இழப்பீட்டு தொகை ரூ. 632.20 கோடியை வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்திய 7 வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். டில்லியை போன்று புதுச்சேரி போலீசார்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X