புதுச்சேரி : ஏ.எப்.டி.,ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க தலைவர் சத்தியசீலன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியை, பா.ஜ.,மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில் சந்தித்து மனு அளித்தனர்.
மனு விபரம்;சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட பென்ஷன் கடந்த மூன்று ஆண்டுகளாக புதுச்சேரியில் 1365 பேர் பெற்று வருகின்றனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தடையாணை ஏதும் இல்லாமல் பி.எப்., அலுவலகம் உள்சுற்றிக்கை மூலம் உயர்த்தப்பட்ட பென்ஷனை நிறுத்துவதற்கு தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பென்ஷன்தாரர்களின் சமூக நீதி பறிக்கப்படுவதுடன், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். ஆகவே மத்திய அரசு தலையிட்டு மூத்த குடிமக்களின் வாழ்வாதார பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும்.
மேலும் வரலாற்று சிறப்பு மிக்க புதுச்சேரி ஏ.எப்.டி., சுதேசி, பாரதி மில்களை தொழில் தகராறு சட்டத்தின்படி மூடிவிட்டனர். இது புதுச்சேரி பொருளாதார வளர்ச்சியிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே மில்களை புனரமைத்து மீண்டும் இயக்கிட மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE