விருத்தாசலம் : விருத்தாசலம் கோ.பொன்னேரி புறவழிச்சாலை ரவுண்டானாவில் தடுப்புக்கட்டை சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம் நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், கடந்த 2011ல், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் வரை புறவழிச்சாலை போடப்பட்டது.அப்போது, கோ.பொன்னேரி, சித்தலுார் பகுதிகளில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்ட நிலையில், விபத்து எச்சரிக்கை சாதனங்கள் ஏதும் பொருத்தப்படவில்லை.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சித்தலுார் ரவுண்டானா வழியாக ஸ்ரீமுஷ்ணம் சென்ற தனியார் பஸ் மீது கேரளாவுக்கு மீன் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி மோதி, மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
அப்போதைய எஸ்.பி., ராதிகா பார்வையிட்டு, சித்தலுார், கோ.பொன்னேரி ரவுண்டானாக்களில் தடுப்புக்கட்டைகள், ைஹமாஸ் விளக்குகள், ஒளி பிரதிபலிப்பான்கள், வாகன ஓட்டுனர் களுக்கான எச்சரிக்கை பலகைகள் பொருத்த உத்தரவிட்டார்.ஆனால், கோ.பொன்னேரி ரவுண்டானாவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு சேதமடைந்து, காட்சிப் பொருளாக மாறியுள்ளது.இதனால் புறவழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே, கோ.பொன்னேரி ரவுண்டானாவில் பழுதடைந்த இரும்பு தடுப்புகளை சீரமைத்து, விபத்து அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE