நமச்சிவாயம் ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி

Added : ஜன 04, 2021
Share
Advertisement
புதுச்சேர : ஆதரவாளர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம் திடீர் ஆலோசனை நடத்தினார்.காங்., மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். தனது வில்லியனுார் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுத்த

புதுச்சேர : ஆதரவாளர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம் திடீர் ஆலோசனை நடத்தினார்.காங்., மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி உள்ளார்.

தனது வில்லியனுார் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுத்த காங்.,மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் சமரச முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் எதிர்கால அரசியல் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்களின் கூட்டம் சாரத்தில் நேற்று நடந்தது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயமும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் பேசுகையில், சட்டசபை தேர்தலில் காங்.,கட்சியில் நாம் தான் முழு வீச்சில் இறங்கி வேலை செய்யப் போகிறோம். எனவே கட்சி பதவியை உங்களுக்கு (நமசிவாயத்திற்கு) தர வேண்டும். இல்லையெனில் உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அனைத்து தொகுதிகளிலும் இறங்கி வேலை செய்ய முடியும். இல்லையெனில் தனிக்கட்சி நாம் ஆரம்பிக்க வேண்டும் என்று கருத்துகளை தெரிவித்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட நமச்சிவாயம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆதரவாளர்கள் கூறிய கருத்துகளை கேட்டுக்கொண்ட அவர், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X