சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் தற்கொலை போலீசார் விசாரணை

Added : ஜன 04, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு : புதுப்பேட்டையில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கடலுார், செம்மண்டலம், குண்டு சாலையை சேர்ந்தவர் கோபிநாத்,51; கடலுார் ஊரக வளர்ச்சித்துறையில் பணி புரிந்தார். இவரது நண்பர்கள் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கு கோபிநாத் ஜாமின் கையெழுத்து போட்டுள்ளார்.கடன் வாங்கியவர்கள் சரிவர பணம் கட்டாததால் நிதி நிறுவனம் கோபிநாத்துக்கு

நடுவீரப்பட்டு : புதுப்பேட்டையில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கடலுார், செம்மண்டலம், குண்டு சாலையை சேர்ந்தவர் கோபிநாத்,51; கடலுார் ஊரக வளர்ச்சித்துறையில் பணி புரிந்தார்.

இவரது நண்பர்கள் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கு கோபிநாத் ஜாமின் கையெழுத்து போட்டுள்ளார்.கடன் வாங்கியவர்கள் சரிவர பணம் கட்டாததால் நிதி நிறுவனம் கோபிநாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனால் மனமுடைந்த கோபிநாத் நேற்று முன்தினம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் உள்ள தந்தை சுந்தரமூர்த்தியின் வீட்டிற்கு வந்தார். அங்கு பேசிக்கொண்டிருந்த கோபிநாத் திடீரென மயங்கி விழுந்தார்.உடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பூச்சி மருந்து குடித்திருப்பது தெரிந்தது. சிகிச்சை பலனின்றி கோபிநாத் நேற்று இறந்தார்.புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X