புதுச்சேரி : கொரோனா தடுப்பூசியை தடை இல்லாமல் செயல்படுத்த மேம்படுத்தப்பட்ட செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் விடுத்துள்ள பதிவு:திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழாவில் கொரோனா பரவாமல் தடுக்க புதுச்சேரி கோவிட் போர் அறையில் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அரசு செயலர் அன்பரசு,நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குழுவுடன் இன்று 4 ம் தேதி காரைக்கால் செல்கிறார். இதேபோல் புதுச்சேரி, மாகியிலும் ஒரு செயல் திட்டம் பின்பற்றப்படும்.ஒன்பது மாதங்களுக்கு மேலாக நமக்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தடுப்பூசி திட்டத்தினை தடையில்லாமல் செயல்படுத்த உறுதி செய்யும். காரைக்கால் கலெக்டர் தினமும் கோவிட் போர் அறைக்கு தகவலை தெரிவிப்பார். ராஜ்நிவாஸ் மதியம் 2.30 மணியளவில் இதனை உயர் அதிகாரிகளுக்கும், மறு ஆய்வு குழுவிற்கு பகிரும்.இவ்வாறு சமூக வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE