பரங்கிப்பேட்டை : பு.முட்லுாரில் கழிவறை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி சுற்றியுள்ள கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலுார், சிதம்பரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். வெளியூரில் இருந்து இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், ஓட்டலில் சாப்பிடவும், டீ குடிக்கவும் இங்கு நிறுத்தி செல்கின்றனர். இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
முக்கியம் வாய்ந்த இடத்தில், கழிவறை இல்லாததால், உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் இயற்கை உபாதை செல்ல இடமின்றி அவதியடைகின்றனர். இரவு நேரங்களில், பெண்கள் மறைவான இடங்களுக்கு, அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.எனவே, பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலை பஸ் நிறுத்தத்தில், கழிவறை கட்டித்தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE