புதுச்சேரி : ஒன்பது மாதத்திற்கு பிறகு புதுச்சேரியில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் துவங்குகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரியில் அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டன.மத்திய அரசின் தளர்வுகளை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்களை தீர்க்கும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.கடந்த மாதம் 17-ம் தேதி முதல் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.இந்நிலையில் இன்று 4ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகள் நடைபெற உள்ளது.
வாரத்தின் ஆறு நாட்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடைபெறும். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், 1, 3, 5, 7-ம் வகுப்புகள்திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8-ம் வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை களிலும் நடைபெறும். இந்த நாட்களில் மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.ஆனால் ஆசிரியர்கள் முழுவதும் பணியில் இருப்பார்கள். வரும் 18-ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE