சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திட்டக்குடி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி மற்றும் ராமநத்தம் பகுதிகளில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படாதது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கடந்த அக்டோபர் 1ம் தேதி புலிகரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த நிவேதிதா என்பவரது வீட்டில்

திட்டக்குடி : திட்டக்குடி மற்றும் ராமநத்தம் பகுதிகளில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படாதது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடி பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கடந்த அக்டோபர் 1ம் தேதி புலிகரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த நிவேதிதா என்பவரது வீட்டில் 8 சவரன் நகை, 1 லட்சம் ரொக்கம் திருடுபோனது. 17ம் தேதி, ஆவினங்குடி சின்ராசு வீட்டில் 3 சவரன் நகை, 70 கிலோ வெள்ளி பொருட்கள்; 19ம் தேதி ராமநத்தம் அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் மணி, ராம்குமார் ஆகியோர் வீடுகளில் 110சவரன் நகை, 7 லட்சம் ரொக்கம் திருடுபோனது.

நவம்பர் 21ம் தேதி ராமநத்தம் அரியாயி,85, என்ற மூதாட்டியிடம் 3 சவரன் நகையை மர்ம நபர் பறித்துச்சென்றார்.டிசம்பர் 18ம் தேதி கண்டமத்தான் கிராமத்தில் 4 வீடுகளில் 2 சவரன் நகை, 30 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது; 24ம் தேதி கோழியூரில் கேஸ் ஏஜென்சி அலுவலகத்தில் திருட்டு முயற்சி நடந்தது. அன்று வதிட்டபுரம் தங்கபாண்டியன் புல்லட் காணாமல் போனது. 28ம் தேதி ஆலத்துார் முருகேசன் வீட்டில் 4 சவரன் நகை, 1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் திருடு போனது.இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களை கண்டுபிடிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X