புத்தாண்டு கொண்டாட வந்த ஆந்திர வாலிபர் விபத்தில் பலி

Added : ஜன 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வந்த ஆந்திர வாலிபர் விபத்தில் சிக்கி இறந்தார். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரட்டூர், சாமைய்யா காரு தெருவை சேர்ந்தவர் நாகேஷ்பாபு 50 போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது மகன் சஞ்சய்குமார், 21; புத்தாண்டை கொண்டாட ஆந்திராவில் இருந்து தனது நண்பர் விஸ்வபிரசாத்துடன், 20; பைக்கில் கடந்த 31ம் தேதி புதுச்சேரி வந்தனர்.மாலை 4.30

புதுச்சேரி : புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வந்த ஆந்திர வாலிபர் விபத்தில் சிக்கி இறந்தார்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரட்டூர், சாமைய்யா காரு தெருவை சேர்ந்தவர் நாகேஷ்பாபு 50 போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது மகன் சஞ்சய்குமார், 21; புத்தாண்டை கொண்டாட ஆந்திராவில் இருந்து தனது நண்பர் விஸ்வபிரசாத்துடன், 20; பைக்கில் கடந்த 31ம் தேதி புதுச்சேரி வந்தனர்.மாலை 4.30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சின்னகாலாப்பட்டு கடற்கரைக்கு பைக்கில் புறப்பட்டனர். பைக்கை சஞ்சய்குமார் ஓட்டினார். புதுச்சேரி பல்கலைக்கழக இரண்டாவது நுழைவு கேட் அருகே சென்றபோது, பைக் நிலை தடுமாறி, சென்ட்ரல் மீடியனில் மோதியது.

அதில், சஞ்சய்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். விஸ்வபிரசாத் லேசான காயத்துடன் தப்பினார். இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சஞ்சய்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து சஞ்சய்குமாரின் தந்தை நாகேஷ்ராவ் அளித்த புகாரின் பேரில், வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X