பஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபருக்கு வலை வீச்சு

Added : ஜன 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி, : போதையில் பஸ் ஓட்டுநரை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர். அரியாங்குப்பம் மணவெளி, பெரியார் நகரை சேர்ந்தவர் இளையராஜா, 38; தனியார் பஸ் டிரைவர். இவரும், அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் ரோட்டை சேர்ந்த அலெக்ஸ்,20; என்பவரும் நேற்று முன்தினம் காலை மணவெளி சாராயக்கடையில் சாராயம் குடித்தனர். போதை தலைக்கேறியதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

புதுச்சேரி, : போதையில் பஸ் ஓட்டுநரை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம் மணவெளி, பெரியார் நகரை சேர்ந்தவர் இளையராஜா, 38; தனியார் பஸ் டிரைவர். இவரும், அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் ரோட்டை சேர்ந்த அலெக்ஸ்,20; என்பவரும் நேற்று முன்தினம் காலை மணவெளி சாராயக்கடையில் சாராயம் குடித்தனர். போதை தலைக்கேறியதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அலெக்ஸ், மரக்கட்டையால், இளையராஜாவை தாக்கினார்.படுகாயமடைந்த இளையராஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து அலெக்சை, தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X