கடலுார் : காதலியை கருகலைப்பு செய்ய வைத்து கொலை மிரட்டல் விடுத்த காதலன் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் ரகுராமன், 27; கூலித் தொழிலாளி. கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த 24 வயது பெண். கடலுார் அருகே தனியார் இன்ஜினியர் கல்லுாரியில் இருவரும் படித்த போது, பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். 2015ல் நாகப்பட்டிணத்தில் பதிவுத் திருமணம் செய்தனர். ரகுராமன் தனது பெற்றோருக்கு தெரியாமல் திருப்பாதிரிப்புலியூரில் காதலி வீட்டில் அவ்வப்போது தங்கி குடும்பம் நடத்தினார்.கடந்த 2017ம் ஆண்டு, காதலி 2 மாதம் கர்ப்பிணியானதை அறிந்த ரகுராமன், தனது வீட்டில் தங்கை உள்ளதால் குழந்தை வேண்டாம் எனக் கூறி கருகலைப்பு செய்ய நெருக்கடி கொடுத்தார்.
கருக்கலைப்பு செய்த பிறகு, பெண்ணின் வீட்டிற்கு ரகுராமன் செல்லவில்லை. அவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததும் தெரிந்தது.இதனை அவரது வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்ட பாதிக்கப்பட்ட பெண்ணை, ரகுராமன், அவரது தந்தை பாஸ்கரன்,48; தாய் கயல்விழி, 43; உறவினர் ரஞ்சித், 35; ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து ரகுராமன் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE