புதுச்சேரி : ஆயுதங்களுடன் வாலிபரை தாக்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணரப்பேட்டை ராசு உடையார் தோட்டத்தை சேர்ந்தவர் இருதயநாதன் மகன் டேவிட், 25; இவர் நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு இரும்பு பைப், உருட்டு கட்டைகளுடன் வந்த தாவீது பேட்டையை சேர்ந்த மகேஷ், 30; சூர்யா, 27; தலைமையிலான கும்பல், டேவிட்டை பார்த்து இனிமேல் எங்கள் பகுதிக்குள் வந்தால் கொலை செய்துவிடுவேன் என தாக்க வந்தனர். இதனால் பயந்து போன டேவிட் சத்தம் போடவே, அப்பகுதி மக்கள் திரண்டனர். உடன் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.இது குறித்து டேவிட் கொடுத்த புகாரின்பேரில் மகேஷ், சூர்யா உள்ளிட்ட கும்பல் மீது ஒதியன்சாலை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE