கடற்கரையில் தங்க செயின்  போலீசார் விசாரணை

Added : ஜன 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கடற்கரையில் ஒன்றரை சவரன் தங்க செயினை தவறவிட்ட நபரை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி, தலைமை செயலகம் அருகே செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கடற்கரை மணலில் விளையாட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி மதியம் 2:00 மணியளவில் செயற்கை மணல் பரப்பில் ஒன்னரை சவரன் தங்க செயின் கிடந்தது. இதனை அங்கு

புதுச்சேரி : கடற்கரையில் ஒன்றரை சவரன் தங்க செயினை தவறவிட்ட நபரை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரி, தலைமை செயலகம் அருகே செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு கடற்கரை மணலில் விளையாட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 21ம் தேதி மதியம் 2:00 மணியளவில் செயற்கை மணல் பரப்பில் ஒன்னரை சவரன் தங்க செயின் கிடந்தது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஐ.ஆர்.பி.,போலீசார் கண்டெடுத்து பெரியக்கடை போலீசில் ஒப்படைத்தார்.இந்த செயினுக்கு சொந்தம் கொண்டாடி இதுவரை யாரும் வரவில்லை. கண்டெடுக்கப்பட்ட செயின், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பெரியக்கடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, தங்க செயினை தவறவிட்ட நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X