கடலுார் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குள்ளஞ்சாவடி பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் தொகையுடன் பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.இதற்காக, குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரம், அப்பியம் பேட்டை, சத்திரம், கட்டியாங்குப்பம், வசனாங்குப்பம் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 ஏக்கரில் பரியிடப்பட்டிருந்த கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் நடந்து வருகிறது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கரும்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க வேலுார், ஆரணி, திண்டுக் கல் உட்பட பல வெளிமாவட்டங்களில் உள்ள கூட்டுவு பண்டக சாலை, கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE