பெட்ரோல் வைத்துக் கொண்டு சிகரெட் பிடித்தவர் தீயில் கருகி பலி

Added : ஜன 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி : பெட்ரோல் பாட்டில் வைத்துக் கொண்டு சிகரெட் பிடித்தவர் தீயில் கருகி இறந்தார். வாணரப்பேட்டை, எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகலிங்கம்,34; இவர் சண்டே மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லுார்துமேரி,27; இவர்களுக்கு வசிதரன்,11; வர்ஷன்,3; என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.நாகலிங்கம், கடந்த 27ம் தேதி மூடி இல்லாத பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு,

புதுச்சேரி : பெட்ரோல் பாட்டில் வைத்துக் கொண்டு சிகரெட் பிடித்தவர் தீயில் கருகி இறந்தார்.

வாணரப்பேட்டை, எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகலிங்கம்,34; இவர் சண்டே மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லுார்துமேரி,27; இவர்களுக்கு வசிதரன்,11; வர்ஷன்,3; என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.நாகலிங்கம், கடந்த 27ம் தேதி மூடி இல்லாத பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, செயின்ட் தெரசா வீதியில் தனது நண்பர் மகன் விஷ்வாவிற்காக பைக்கில் காத்திருந்தார்.அப்போது, நாகலிங்கம் சிகரெட் பற்ற வைத்தபோது, பைக் மீது வைத்திருந்த மூடி இல்லாத பாட்டில் சாய்ந்து, அவர் மீது பெட்ரோல் தெளித்தது.

அதே நேரத்தில் அவர் பற்ற வைத்திருந்த சிகரெட் விழுந்தது. அதில், நாகலிங்கத்தின் மேல்சட்டை தீப்பற்றி எரிந்தது.அவ்வழியே சென்றவர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும், நாகலிங்கத்தின் கைகள் மற்றும் முதுகில் தீக்காயம் ஏற்பட்டது. உடன் அவரை, புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் மதியம் 2.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X