புதுடில்லி: கொரோனா வைரசுக்கான, 'கோவிஷீல்ட்' தடுப்பூசியை, குறைந்த விலையில் விற்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், 'ஆஸ்ட்ராஜெனெகா' நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள, கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை, நம் நாட்டில் புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

இந்த தடுப்பூசியை உடனடியாக பயன்படுத்த, மத்திய அரசு, நேற்று அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தது. அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டதால், அடுத்த சில நாட்களில், பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த தடுப்பூசி, 70 - 80 சதவீதம் செயல்திறன் உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல், குறைந்த விலையில், இந்த தடுப்பூசியை வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், 'பைசர்' தடுப்பூசியின் ஒரு டோஸ், 1,300 ரூபாய் முதல், 1,400 ரூபாய் வரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல், 'மாடர்னா' தடுப்பூசியின் ஒரு டோஸ், 2,704 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை ஒப்பிடும்போது, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி, குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. லாபம் இல்லாமல் விற்க, சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.குறைந்தபட்சம், ஒரு டோஸ், 200லிருந்து, அதிகபட்சமாக, 1,000 ரூபாய் வரை விற்கப்படும் என தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE