பொது செய்தி

இந்தியா

குடியிருப்பு கட்டடங்கள் சேதம்

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021
Share
Advertisement
காட்டேரிக்குப்பம் : காட்டேரிக்குப்பம் அரசு சுகாதாரம் மற்றும் நலவழி மையத்தின் குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலைக்கு மாறியுள்ளது. மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அரசு சுகாதாரம் மற்றும் நலவழி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, படுக்கை வசதிகளுடன் கூடிய ரத்த பரிசோதனை கூடம், கண் சிகிச்சை கூடம், பிசியோதெரபி

காட்டேரிக்குப்பம் : காட்டேரிக்குப்பம் அரசு சுகாதாரம் மற்றும் நலவழி மையத்தின் குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலைக்கு மாறியுள்ளது.

மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அரசு சுகாதாரம் மற்றும் நலவழி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, படுக்கை வசதிகளுடன் கூடிய ரத்த பரிசோதனை கூடம், கண் சிகிச்சை கூடம், பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகள் அமைந்துள்ளன.இதனால், காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள புதுச்சேரி, தமிழகப் பகுதியை சேர்ந்த நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையில் மட்டுமே டாக்டர்கள் பணியில் உள்ளனர். மற்ற நேரங்களில் நோயாளிகளுக்கு செலிவியர்களே சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.இதற்கிடையே, மருத்துவமனை அருகே ஊழியர்களுக்காக பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகள் யாரும் தற்போது தங்காததால், பராமரிப்பு இன்றி சேதமடைந்து, விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.எனவே, மருத்துவமனையில் இரவு நேரங்களில் சிகிச்சை அளிக்க டாக்டர்களை நியமிக்கவும், சேதமடைந்துள்ள அரசு குடியிருப்புகளை சீரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X