திருவெண்ணெய்நல்லுார் : முன்விரோத தகராறில் போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெய்கை அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மனைவி உமா, 45; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி, 48; என்பவருக்கும் கோழி குப்பையை கிளறியது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 27ந் தேதி இரவு 7 மணியளவில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயக்கொடி, 48; வரதராஜ், 52; ஆகிய இருவரும் சேர்ந்து உமாவை திட்டி தாக்கியுள்ளனர்.உமா புகாரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் ஜெயக்கொடி, வரதராஜன் ஆகியோர் மீது வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE