கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏமப்பேர் மற்றும் மோட்டாம்பட்டியில் தி.மு.க., எம்.பி., ரூ.2.50 லட்சம் மதிப்பில் மின்னொளி கைப்பந்து ஆடுகளம் அமைத்து கொடுத்து துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் இந்தியன் கைப்பந்து சங்கம், சங்கராபுரம் அடுத்த மோட்டாம்பட்டி ராமர் கிளாசிக் கைப்பந்து சங்கத்தினர் மின்னொளி கைப்பந்து விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி தி.மு.க., எம்.பி., கவுதமசிகாமணியிடம் கோரிக்கை வைத்தனர். இதனையொட்டி, எம்.பி., கவுதமசிகாமணி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பில் மின்னொளி கைப்பந்து விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்தார்.
மைதானம் துவக்க நிகழ்ச்சியில் எம்.பி., கவுதமசிகாமணி பங்கேற்று மின்னொளி விளையாட்டு மைதானத்தில் இரவு, பகல் வாலிபால் போட்டியினை துவக்கி வைத்தார்.இதில், தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கென்னடி, ராமமூர்த்தி, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் முரளி, கள்ளக்குறிச்சி மாவட்ட கைபந்து கழக தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பாலாஜி, சேர்மன் மனோகர், பொருளாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE